2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

காரைதீவில் புத்தாண்டு மரதன் ஓட்டப் போட்டி

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 22 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலாநந்தா சனசமுக நிலையமும் இணைந்து '27வது மாபெரும் கலாசார விளையாட்டு விழாவை சனிக்கிழமை (19) நடத்தியது. காலை நிகழ்வாக மரதன் ஓட்டப் போட்டி நடைபெற்றது. 

விசுவாவசு சித்திரை வருடப்பிறப்பையொட்டியும் காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 42வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாகவும் நடத்தப்பட்ட போட்டிகளுக்கு, ASCO மற்றும் சொர்ணம் நகைமாளிகை இணை அனுசரணை வழங்கின

கழகத் தலைவர் எல்.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கழக போசகர்களான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் மற்றும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

வி.ரி.சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X