Editorial / 2017 டிசெம்பர் 28 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில், மெல்பேணில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த நான்காவது டெஸ்டின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், 9 விக்கெட்டுகளை இழந்து 491 ஓட்டங்களைக் குவித்து இப்போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது.
தற்போது களத்தில், அலிஸ்டயர் குக் 244, ஜேம்ஸ் அன்டர்சன் ஓட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக, ஜோ றூட் 61, ஸ்டூவர்ட் ப்ரோட் 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில், நேதன் லையன், ஜொஷ் ஹேசில்வூட், பற் கமின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அவுஸ்திரேலிய அணி, தமது முதலாவது இனிங்ஸில் 327 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. துடுப்பாட்டத்தில், டேவிட் வோணர் 103, அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 76, ஷோர்ன் மார்ஷ் 61, கமரோன் பன்குரோப்ட் 26, டிம் பெய்ன் 24 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஸ்டூவர்ட் ப்ரோட் 4, ஜேம்ஸ் அன்டர்சன் 3, கிறிஸ் வோக்ஸ் 2, டொம் குரான் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago