Editorial / 2018 ஜனவரி 04 , பி.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான, விலகல் முறையிலான தொடரான கோப்பா இத்தாலியா தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான ஜூவென்டஸ் தகுதிபெற்றுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற டொரினோ அணியுடனான காலிறுதிப் போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே அரையிறுதிப் போட்டிக்கு ஜூவென்டஸ் தகுதிபெற்றுள்ளது. ஜூவென்டஸ் சார்பாக, டக்லஸ் கொஸ்டா, மரியோ மண்டூஸிக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், தமது அரையிறுதிப் போட்டியில் அட்டலாண்டாவை ஜூவென்டஸ் எதிர்கொள்ளவுள்ளதுடன், மற்றைய அரையிறுதிப் போட்டியில் லேஸியோவும் ஏ.சி மிலனும் மோதவுள்ளன.
3 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago