Shanmugan Murugavel / 2016 ஜனவரி 01 , மு.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் இடம்பெறவுள்ள நிலையில், அப்போட்டியில், 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் அவுஸ்திரேலியா களமிறங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்னி ஆடுகளம், சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமானதாக அமையுமென எதிர்பார்க்கப்படுவதோடு, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வளிப்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
பீற்றர் சிடிலும் ஜொஷ் ஹேஸல்வூடும், உபாதைகளுக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருந்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு ஓய்வு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கணுக்கால் உபாதையை வெளிப்படுத்திய பீற்றர் சிடில், அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு, இத்தொடரில் பின்னர் அவுஸ்திரேலிய அணி, இலங்கைக்கு வரவுள்ள நிலையில், இரண்டாவது சுழற்பந்து வீச்சாளரின் திறமையைப் பரிசீலிப்பதாகவும் இம்முயற்சி அமையவுள்ளது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago