Shanmugan Murugavel / 2016 ஜனவரி 03 , மு.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின், கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற போட்டிகளில் ஆர்சனல், மன்செஸ்டர் சிற்றி, மன்செஸ்டர் யுனைட்டெட், வெஸ்ட் ஹாம், நோர்விச், சந்தர்லேண்ட், வெஸ்ட் புரோம் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளதோடு, லிவர்பூல் தோல்வியடைந்துள்ளதோடு, லெய்செஸ்டர், பௌர்ண்மௌத் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.
ஆர்சனல் அணியானது, 1-0 என்ற கோல் கணக்கில் நியூகஸ்டில் அணியைத் தோற்கடித்து, பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில், லெய்செஸ்டரை விட இரண்டு புள்ளிகள் அதிகமாகப் பெற்று முதலிடத்தில் உள்ளது. இப்போட்டியில் பெறப்பட்ட கோலை ஆர்சனலின் தடுப்பாட்டக்காரர் லோரண்ட் கொஸ்ஸென்கி பெற்றிருந்தார்.
மன்செஸ்டர் சிற்றி அணி, 2-1 என்ற கோல்கணக்கில் வட்போர்ட்டை தோற்கடித்திருந்தது. போட்டியின் முதற்பாதியில் இரு அணிகளும் கோல்களைப் பெற்றிருக்காத நிலையில், போட்டியின் 55ஆவது நிமிடத்தில் சிற்றியின் அலெக்சாண்டர் கொலாரொவ் ‘ஒவ்ண்’ கோலைப் பெற வட்போர்ட் அணி முன்னிலை பெற்றது. எனினும் போட்டி முடிவடைய பத்து நிமிடங்கள் இருக்கையில், சிற்றியின் யாயா டோரே 82ஆவது நிமிடத்திலும் சேஜியோ அக்ரோ, 84ஆவது நிமிடத்திலும் பெற்ற கோல்களின் மூலம் அவ்வணி வெற்றி பெற்றது. பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில், ஆர்சனலை விட மூன்று புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ள சிற்றி, மூன்றாவது இடத்தில் நீடிக்கின்றது.
இதேவேளை, மன்செஸ்டர் யுனைட்டெட் அணி, 2-1 என்ற கோல் கணக்கில் சுவான்சீ அணியைத் தோற்கடித்து, தொடர்ச்சியாக எட்டு போட்டிகளில் வெற்றி பெறாத நிலையை முடித்துக் கொண்டது. இப்போட்டியில், 47ஆவது நிமிடத்தில் அந்தோணி மார்ஷியல் ஒரு கோலைப் பெற்றபோதும், பின்னர் சுவான்சீயின் கிய்ல்ஃபி சிகௌர்ட்சன் 70ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் மூலம் கோல் எண்ணிக்கை சமநிலையாகியிருந்த நிலையிலும் போட்டியின் 77ஆவது நிமிடத்தில் யுனைட்டெட்டின் நட்சத்திரவீரர் வெயின் ரூனி பெற்ற கோலின் மூலம் அவ்வணி வெற்றி பெற்றது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago