Shanmugan Murugavel / 2016 மார்ச் 11 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது ஒப்பந்தம் முடிவடைந்தவுடன் இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியிலிருந்து விலகப்போவதாக அவ்வணியின் நட்சத்திர வீரர் சேர்ஜியோ அக்ரோ தெரிவித்துள்ளார்.
மன்செஸ்டர் சிற்றி அணியுடன் ஐந்து வருட ஒப்பதத்தை ஆர்ஜென்டீனா அணியின் தேசிய வீரரான சேர்ஜியோ அக்ரோ கொண்டிருக்கையில், அவரது ஒப்பந்தமானது 2018-19 பருவகாலத்துடன் முடிவடைகிறது.
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டமிருந்து 38 மில்லியன் ஸ்டேர்லிங் பவுன்ஸ்களுக்கு 2011ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட சேர்ஜியோ அக்ரோ, மன்செஸ்டர் சிற்றிக்காக இரண்டு பிறீமியர் லீக் பட்டங்களை வென்றதுடன் 128 கோல்களை அடித்துள்ளார்.
இது தெளிவாக இருப்பதாகவும் தான் தனது முதல் கழகமான இன்டிபென்டியன்டிக்கு திரும்பப்போவதாகவும் அங்கே ஓய்வு பெறப்போவதாகவும் 27 வயதான அக்ரோ, ஆர்ஜென்டீனா வானொலி நிலையமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மன்செஸ்டர் சிற்றியில் இருப்பவர்களுக்கு நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்று தெரியும், நான் ஆர்ஜென்டீனாவுக்கு திரும்ப விரும்புகிறேன் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.
தவிர, மன்செஸ்டர் சிற்றியில் 2018ஆம் ஆண்டு எனது ஒப்பந்தம் முடிவடைந்த பின் , நான் அங்கே போகப் போகின்றேன் என எனது குடும்பத்துக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும் 2018ஆம் ஆண்டு தனது ஒப்பந்தம் முடிவடைகின்றது என ஏன் அக்ரோ கூறினார் என்பது தெளிவில்லாமல் உள்ளது. ஏனெனில், அவரது ஒப்பந்தம் 2019 வரை உள்ளதாக மன்செஸ்டர் சிற்றி உறுதிப்படுத்தியுள்ளது.
14 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
1 hours ago