2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

செல்சி அபார வெற்றி

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 04 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டிகளில் செல்சி வெற்றி பெற்றுள்ளதோடு எவர்ற்றன், டொட்டென்ஹாம் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையிலும் முடிவடைந்திருந்தது.

இதில், பிறீமியர் லீக்கிலிருந்து வெளியேற்றப்படும் வலயத்திற்கு அண்மையில் இருக்கும் கடந்த பருவகால சம்பியனான செல்சி, 3-0 என்ற கோல் கணக்கில், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் ஏழாம் இடத்தில் இருக்கும் கிறிஸ்டல் பலஸ் அணியை தோற்கடித்துள்ளது.

இப்போட்டியில் 29ஆவது நிமிடத்தில் ஒஸ்காரும் 60ஆவது நிமிடத்தில் வில்லியனும் 66ஆவது நிமிடத்தில் டியகோ கோஸ்டாவும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்தனர். போட்டியின், 16ஆவது நிமிடத்திலேயே கடந்த பருவகாலத்தின் சிறந்த வீரரான ஈடின் ஹசார்ட் காயம் காரணமாக வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், இவர்கள் மூவரும் இணைந்து சிறந்த தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். போட்டியின் சிறந்த வீரராக டியகோ கோஸ்டா தெரிவாகியிருந்தார்.

கூஸ் ஹிட்டிங், செல்சியின் இடைக்காலப் பயிற்சியாளராகப் பதவியேற்ற பின், செல்சி பெற்ற முதலாவது வெற்றி இதுவேயாகும். தவிர, பிறீமியர் லீக்கில் வெளியேற்றப்படும் வலயப்புள்ளிகளை விட தற்போது, ஆறு புள்ளிகளை செல்சி மேலதிகமாகக் கொண்டுள்ளது.

இதேவேளை, எவர்ற்றன், டொட்டென்ஹாம் அணிகளுக்கிடையிலான போட்டியில், இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்த நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .