Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 01 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி, பிரேஸில் தேசிய கால்பந்தாட்டஅணியின் தடுப்பாட்டக்காரான டேவிட் லூயிஸை, 34 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு, பிரான்ஸ் கழகமான பரிஸா ஜேர்மா கழகத்திலிருந்து ஒப்பந்தம் செய்துள்ளது.
போர்த்துக்கல் கழகமான பெய்ஃபிகாவிலிருந்து, 2011ஆம் ஆண்டு, 21.3 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட 29 வயதான லூயிஸ், 143 போட்டிகளில் செல்சிக்காக ஆடி, 2014ஆம் ஆண்டு, 40 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு பரிஸா ஜேர்மா அணிக்கு சென்றிருந்த நிலையிலேயே, தற்போது, மூன்று வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, செல்சியின் முன்கள வீரரான 28 வயதான ஜுவான் குவார்டோ, இத்தாலியின் ஜுவென்டஸ் கழகத்துக்கு, மூன்று வருட கடனடிப்படையில் சென்று மீள இணைகிறார்.
இது தவிர, பிரான்ஸ் தேசிய அணியின் மத்தியகள வீரரான மூஸா சிஸாகோவை, 30 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு, நியூகாசில் அணியிலிருந்து டொட்டென்ஹாம் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
இத்தாலி தேசிய அணியின் முன்கள வீரரான லிவர்பூல் அணியின் மரியோ பலோட்டலி, பிரான்ஸின் நீஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதோடு, இங்கிலாந்து தேசிய அணியின் மத்தியகள வீரரான ஆர்சனலின் ஜக் வில்ஷயர், ஒரு பருவகாலத்துக்கு, கடனடிப்படையில பேர்ண்மெத் அணிக்கு வழங்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மன்செஸ்டர் சிற்றி அணியிலிருந்து, பிரான்ஸ் தேசிய அணியின் மத்தியகள வீரர் சமீர் நஸ்ரி, ஸ்பெய்ன் அணியான செவில்லாவுக்கு பருவகாலமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, பிரான்ஸ் தேசிய அணியின் தடுப்பாட்டக்காரரான எலியாக்கிம் மங்காலா, எதிர்வரும் ஜூன் மாதம் வரை வலென்சியா அணிக்கு வழங்கப்பட்டுள்ளார். தவிர, இங்கிலாந்து அணியின் கோல்காப்பாளரான ஜோ ஹார்ட், இத்தாலிய அணியான டொரினோவுக்கும் மத்தியகள வீரரான வில்ஃபிரைட் போனி, ஸ்டோக் சிற்றிக்கும், ஒரு பருவகாலத்துக்கு கடனடிப்படையில் வழங்கப்பட்டுள்ளார்.
49 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago