Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் பயிற்சியாளராக, தற்போதைய இத்தாலி தேசிய கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளரான அந்தோனியோ கொந்தே, இங்கிலாந்தின் இந்த கோடைப் பருவ காலத்திலிருந்து நியமிக்கப்படவுள்ளார்.
இத்தாலி கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸ்ஸின் முன்னாள் பயிற்சியாளரான 46 வயதான அந்தோனியோ கொந்தே, யூரோ 2016 கிண்ணத்தில் அவரது நாடான இத்தாலி பங்குபற்றியதைத் தொடர்ந்து தனது மூன்று வருட ஒப்பந்தத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
தனது நாட்டின் தேசிய அணியின் பயிற்சியாளராக தான் பெருமையடைவதாகவும் இதைத் தொடர்ந்து செல்சியின் பயிற்சியாளராகவிருப்பது அதே போன்று கவர்ச்சியானது என அந்தோனியோ கொந்தே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீக்கப்பட்ட ஜொஸ் மொரின்ஹோவை பிரதியீடு செய்த கூஸ் ஹிட்டிங், இந்தப் பருவ இறுதி வரை பயிற்சியாளராக தொடர்வார் எனக் கூறப்பட்டுள்ளது.
15 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
1 hours ago