Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்று வரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டிகளில் செல்சி, லெய்செஸ்டர், நோர்விச், டொட்டேன்ஹாம், கிறிஸ்டல் பலஸ், போர்ண்மௌத் ஆகிய அணிகள் வெற்றி பெற்றிருந்ததோடு, நியூகஸ்டில், அஸ்டன் வில்லா அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
இதில், சுந்தர்லேண்ட் அணியை செல்சி வெற்றி கொண்டுள்ளது. இப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் செல்சி வெற்றி பெற்றிருந்தது. செல்சி சார்பாக ஐந்தாவது நிமிடத்தில் பிரயன்ஸ்லவ் இவானோவிக், 13ஆவது நிமிடத்தில் பெட்ரோ, 50ஆவது நிமிடத்தில் பனால்டி மூலம் ஒஸ்கார் ஆகியோர் கோல்களைப் பெற்றிருந்தனர். சுந்தர்லேண்ட் அணி சார்பாக பபியோ பொரிணி, பெறப்பட்ட கோலைப் பெற்றிருந்தார்.
எனினும் மேற்படி போட்டியில், போட்டியின் முடிவை விட, மொரின்ஹோ நீக்கப்பட்டமையே ஆக்கிரமிப்புச் செலுத்தியிருந்தது. செல்சி அணியின் ரசிகர்கள், மொரின்ஹோவுக்கு பூரண ஆதரவைத் தெரிவித்ததுடன், மொரின்ஹோவின் நீக்கத்துக்கு காரணமானவர்கள் என ரசிகர்களால் நம்பப்படும், சீஸ்க் பப்ரிகாஸ், டியகோ கோஸ்டா ஆகியோர், போட்டிக்கு முன்பும் போட்டியின்போதும் கேலி செய்யப்பட்டிருந்தனர்.
இந்தப் போட்டியின் போது, இந்த பருவகால இறுதி வரை செல்சியின் பயிற்சியாளராக உறுதிப்படுத்தப்பட்ட கூஸ் ஹிட்டிங், செல்சி அணியின் உரிமையாளர் ரோமன் அப்ரோமோவிச், செல்சி அணியின் முன்னாள் வீரர் டிடியர் ட்ரோக்பா ஆகியோருடன் இணைந்து மேற்படி போட்டியை பார்வையிட்டிருந்தார்.
இதேவேளை, நோர்விச், மன்செஸ்டர் யுனைட்டெட்க்கு எதிராக அதிர்ச்சி வெற்றி பெற்றுள்ளது. 2-1 என்ற கோல் கணக்கிலேயே நோர்விச் அணியானது வெற்றி பெற்றது. போட்டியின் 38ஆவது நிமிடத்தில் நோர்விச் அணியின் கமெரோன் ஜெரோம் பெற்ற கோலின் மூலம் முன்னிலை பெற்ற அவ்வணி, அலெக்ஸ் டெட்டாய் 54ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் மூலம் வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டது. பின்னர் 66ஆவது நிமிடத்தில் யுனைட்டெட்டின் அந்தோணி மார்ஷியல் ஒரு கோலைப் பெற்றிருந்தார். இந்த வெற்றியுடன், வெளியேற்றப்படும் அபாயத்தை நோர்விச் அணி தவிர்த்துள்ளது. மறுகணம் தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றியடையாதநிலையைக் கொண்டு பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் ஐந்தாம் இடத்துக்கு சென்றது. இந்தப் போட்டி முடிவடைய முன்பே பல ரசிகர்கள், அரங்கத்திலிருந்து வெளியேறியிருந்ததுடன், அணிக்கு கூ செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை, ஏனைய போட்டிகளில் லெய்செஸ்டர், 3-2 என்ற கணக்கில் எவர்ட்டனை தோற்கடித்ததுடன், டொட்டேன்ஹாம் அணியானது 2-0 என்ற கோல் கணக்கில் சௌதாம்டனை தோற்கடித்திருந்ததுடன், கிறிஸ்டல் பலஸ் அணியானது 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்டோக் அணியைத் தோற்கடித்ததுடன், போர்ண்மோட் அணியானது 2-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் புரோம் அணியைத் தோற்கடித்தது. நியூகஸ்டில், அஸ்டன் வில்லா அணிகளுக்கிடையிலான போட்டி, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago