2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சில வீரர்களிடம் ஆர்வமில்லை: மொரின்ஹோ

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான செல்சி அணி, தொடர்ந்தும் மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்திவரும் நிலையில், தனது அணியின் வீரர்கள் மீதே தவறு காணப்படுவதாக, அவ்வணியின் முகாமையாளரான ஜோஸ் மொரின்ஹோ தெரிவித்துள்ளார்.

செல்சி அணி, மோசமான பெறுபேறுகளின் காரணமாக, 16ஆவது இடத்திலேயே காணப்படுகிறது. இதுவரை 16 போட்டிகளில் பங்குபற்றியுள்ள செல்சி, 4 போட்டிகளில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ளதோடு, 9 போட்டிகளில் தோல்வியையும் 3 போட்டிகளில் சமநிலை முடிவையும் பெற்றுள்ளது.

இதன் காரணமாக, மொரின்ஹோ மீது அழுத்தங்கள் காணப்படுவதுடன், அப்பதவியிலிருந்து அவர் நீக்கப்பட வேண்டுமா என்ற விவாதங்களும் காணப்படுகின்றன.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த அவர், 'செல்சி என்பது பெரியது. கால்பந்தாட்டமென்பது, வேலையொன்றை விடப் பெரியது. அது, பேரார்வமாகும். களத்தில் ஒவ்வொரு போட்டியின்போதும் நீங்கள், நம்பமுடியாதளவு பேரார்வத்துடன் வாழ வேண்டும்" எனத் தெரிவித்தார்.

'சில செல்சி வீரர்கள், செல்சியிலும் கால்பந்தாட்டத்திலும் அவர்கள் வாழ்வதை மீள எண்ண வேண்டும்" எனத் தெரிவித்ததோடு, 'ஆமாம், சில வீரர்களுடன் நான் எரிச்சலடைந்துள்ளேன். இன்னுஞ்சில வீரர்கள், முழுமையான பங்கை வழங்கும் நிலையில், தோற்பதற்குப் பொருத்தமில்லாதவர்கள் என நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், லெய்செஸ்டர் அணிக்கெதிரான தோல்வியின் பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த மொரின்ஹோ, சில வீரர்களால் துரோகமிழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த போதும், எந்த வீரர்கள் மீது இவ்வாறான கருத்துக்களைத் தெரிவிக்கிறார் என்பதைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கவில்லை.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .