Shanmugan Murugavel / 2016 ஜூலை 06 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் பெண்களுக்கான ஒற்றையர் போட்டிகளின் இறுதிப் போட்டியில், தனது சகோதரியான வீனஸ் வில்லியம்ஸை எதிர்கொள்ளும் வாய்ப்பு, அதிர்ச்சிகரமானது என, உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
இவர்களிருவருமே, நேற்று இடம்பெற்ற காலிறுதிப் போட்டிகளில் வெற்றிபெற்று, அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றிருந்தனர். 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், விம்பிள்டன் அரையிறுதிக்கு இவர்களிருவருமே தகுதிபெற்றமை, இதுவே முதற்றடவையாகும்.
இவர்களிருவரும் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற வேண்டுமாயின், இன்று இடம்பெறவுள்ள போட்டியில் ரஷ்யாவின் எலினா வெஸ்னினாவையும், அவுஸ்திரேலியப் பகிரங்கச் சம்பியனான அங்கெலிக் கேர்பரையும், செரினாவும் வீனஸூம் முறையே தோற்கடிக்க வேண்டும்.
இந்நிலையில், தனது 36 வயதான சகோதரிக்கெதிராக விளையாடுவது குறித்து, 34 வயதான செரினா, ஆச்சரியத்துடன் கருத்துத் தெரிவித்தார். இருவருக்குமிடையிலான போட்டி, தொடர்ந்தும் நீண்டுவருவது குறித்து ஆச்சரியமடைவதாகத் தெரிவித்த அவர், சிறிய வயதில் இருக்கும் போது, இவ்வாறான கனவுகள் காணப்படுமெனவும், அது உண்மையாக வரும் போது, மிக வித்தியாசமான உணர்வு எனவும் தெரிவித்தார்.
"வீனஸ் வில்லியம்ஸ், சிறந்த போராடும் தன்மை கொண்டவர் என அது அர்த்தப்படுகிறது. அவர் மிகுந்த போராடும் குணம் கொண்டவர். நான் எப்போதும் சொல்வது போல, இது என்னை மிகவும் ஊக்கப்படுத்துகிறது" என, செரினா மேலும் தெரிவித்தார்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago