2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சந்தேகத்தில் வில்லியர்ஸின் எதிர்காலம்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க ஒருநாள் சர்வதேசப் போட்டி அணித்தலைவரும், முக்கியமான துடுப்பாட்ட வீரருமான ஏபி டி வில்லியர்ஸ், தனது எதிர்காலம் குறித்த முரண்பாடான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஏபி டி வில்லியர்ஸூம் டேல் ஸ்டெய்னும் வேர்ணன் பிலாந்தரும், சர்வதேசப் போட்டிகளிலிருந்து விலகவுள்ளதாக, சில செய்திகள் வெளியாகியிருந்தன.

தென்னாபிரிக்காவின் நிறக் கொள்கைகளுக்கு எதிராகவே, வில்லியர்ஸூம் ஸ்டெய்னும் விலகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அது தொடர்பில் கேட்கப்பட்டபோது, அதிகளவிலான போட்டிகளில் பங்குபற்றுவதால், அவற்றைக் குறைப்பது பற்றிக் கவனஞ்செலுத்துவதாக, வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஆனால், ஓய்வுபெறுவது குறித்த கருத்தை ஏற்றுக் கொள்ளவோ அல்லது மறுக்கவோ இல்லை.

இவ்விடயம் தொடர்பாக, அடுத்தாண்டு மே மாதத்தில், தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையுடன் கலந்துரையாடவுள்ளதாக, வில்லியர்ஸ் அறிவித்துள்ளார்.

டேல் ஸ்டெய்ன், வேர்ணன் பிலாந்தர் தொடர்பாக, உறுதியான தகவல்களெவையும் வெளியாகவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .