Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 01 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், ஐந்தாம் நிலை வீராங்கனையான எலெனா றிபெகினா சம்பியனாகியுள்ளார்.
முதல் நிலை வீராங்கனையான அரீனா சபலெங்காவுடன் சனிக்கிழமை (31) நடைபெற்ற இறுதிப் போட்டியில் 6-4 என்ற ரீதியில் முதலாவது செட்டை வென்ற கஸக்ஸ்தானின் றிபெகினா, 4-6 என்ற ரீதியில் இரண்டாவது செட்டை இழந்து தீர்க்கமான மூன்றாவது செட்டில் 0-3 என பின்தங்கியிருந்தபோதும் மீண்டு வந்து 6-4 என்ற ரீதியில் செட்டைக் கைப்பற்றி சம்பியனானார்.
தனது அரையிறுதிப் போட்டியில் ஆறாம் நிலை வீராங்கனையான ஜெஸிக்கா பெகுலாவை 6-3, 7-6 (9-7) என்ற நேர் செட்களில் வென்று றிபெகினாவும், தனது அரையிறுதிப் போட்டியில் உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினாவை 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்று பெலாரஸின் சபலெங்காவும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தனர்.
8 minute ago
25 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
25 minute ago
52 minute ago