Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (05) ஆரம்பித்தன. இதில் ஸ்பெயின் கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவும் ஜேர்மனி கால்பந்தாட்டக் கழகமான பெயார்ண் முனிச்சும் வெற்றி பெற்றன.
பார்சிலோனா, அத்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகளுக்கிடையில் பார்சிலோனாவின் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது சுற்று காலிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் பார்சிலோனா வெற்றி பெற்றது.
இப்போட்டியில் அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக போட்டியின் 25ஆவது நிமிடத்தில் கோலைப் பெற்ற பெர்னாண்டோ டோரிஸ், ஏழு நிமிடங்களில் இரண்டு தடவை மஞ்சள் அட்டை காட்டப்பெற்றதனால் போட்டியின் 35ஆவது நிமிடத்தில் சிவப்பு அட்டை காட்டப்பெற்று வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், இப்போட்டியில் பார்சிலோனா சார்பாக பெறப்பட்ட இரண்டு கோல்களையும் இரண்டாவது பாதியில், போட்டியின் 25ஆவது, 35ஆவது நிமிடங்களில் பெற்ற லூயிஸ் சுவரேஸ், போட்டியின் முதலாவது பாதியின்போது அத்லெட்டிகோ மட்ரிட் அணியின் வலது பின்கள வீரரான குவான்பிரன் டொரெஸை உதைத்தபோதும் மத்தியஸ்தரினால் எச்சரிக்கக்கூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜேர்மனிய கால்பந்தாட்டக் கழகமான பெயார்ண் முனிச், போர்த்துக்கல் கால்பந்தாட்டக் கழகமான பேய்பீக்கா ஆகிய அணிகளுக்கிடையே பெயார்ண் முனிச் அணியின் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது சுற்று காலிறுதிப்போட்டியில், 1-0 என்ற கோல்கணக்கில் பெயார்ண் முனிச் அணி வெற்றி பெற்றது. அவ்வணி சார்பாக பெறப்பட்ட கோலை போட்டியின் இரண்டாவது நிமிடத்தில் தலையால் முட்டி மத்தியகள வீரரான அர்த்துரு விடல் பெற்றிருந்தார்.
17 minute ago
21 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
50 minute ago