Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 நவம்பர் 18 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டாரில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் உலகக் கிண்ணத் தொடருக்கான தென்னமெரிக்க கால்பந்தாட்டச் சம்மேளன தகுதிகாண் போட்டிகளில், ஆர்ஜென்டீனாவில் நேற்றுக் காலை நடைபெற்ற அவ்வணிக்கும், பிரேஸிலுக்கு மிடையிலான போட்டி 0-0 என சமநிலையில் முடிவடைந்தது.
அந்தவகையில், உலகக் கிண்ணத்துக்கு ஆர்ஜென்டீனா தகுதி பெற்றது.
இதேவேளை, பொலிவியாவில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் உருகுவே தோற்றது. பொலிவியா சார்பாக, ஜுவான் கார்லோஸ் ஆர்சே இரண்டு கோல்களையும், மார்செலோ மார்டின்ஸ் மொரெனோ ஒரு கோலையும் பெற்றனர்.
இந்நிலையில், கொலம்பியாவில் நடைபெற்ற அவ்வணிக்கும், பராகுவேக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இதேவேளை, சிலியில் நடைபெற்ற அவ்வணிக்கும் ஈக்குவடோருக்குமிடையிலான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் சிலி தோற்றது. ஈக்குவடோ சார்பாக, எர்விஸ் எஸ்டுபினான், மொய்ஸஸ் கைசெடோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
34 minute ago
50 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
50 minute ago
9 hours ago