2026 மார்ச் 21, சனிக்கிழமை

சம்பியன்ஸ் லீக்: காலிறுதியில் அத்லெட்டிகோ, மியூனிச்

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 19 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிப் போட்டிக்கு ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச் ஆகியன தகுதி பெற்றுள்ளன.

தமது மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருடனான முதலாவது சுற்று இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த அத்லெட்டிகோ, டொட்டென்ஹாமின் மைதானத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் தோற்றபோதும் 7-5 என்ற மொத்த கோல் கணக்கில் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

அத்லெட்டிகோ சார்பாக ஜூலியன் அல்வரேஸ், டேவிட் ஹங்கொ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். டொட்டென்ஹாம் சார்பாக ஸ்கெவி சிமொன்ஸ் இரண்டு கோல்களையும் றன்டல் கொலோ முவானி ஒரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை இத்தாலிய சீரி ஏ கழகமான அத்லாண்டாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது சுற்றுப் போட்டியில் 6-1 என்ற கோல் கணக்கில் வென்ற மியூனிச், தமது மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் வென்று 10-2 என்ற மொத்த கோல் கணக்கில் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. மியூனிச் சார்பாக ஹரி கேன் இரண்டு கோல்களையும் லெனார்ட் கார்ள், லூயிஸ் டியஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட கோலை லஸர் சமர்டிஸிச் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .