2025 டிசெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

சம்பியன்ஸ் லீக்: மட்ரிட்டை வென்ற சிற்றி

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 11 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக் தொடரில், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் மைதானத்தில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி வென்றது.

சிற்றி சார்பாக நிக்கோ ஓ ரெய்லி, எர்லிங் ஹலான்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை றொட்றிகோ பெற்றிருந்தார்.

இதேவேளை லா லிகா கழகமான அத்லெட்டிக் பில்பாவோவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும் நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைனுக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இந்நிலையில் போர்த்துக்கல் கழகமான பெய்பிக்காவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலி தோற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X