Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 29 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில் லிவர்பூல் சம்பியனாகியது.
தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருடனான போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலமே இன்னும் நான்கு போட்டிகள் மீதமிருக்கையிலேயே சம்பியனாவதை லிவர்பூல் உறுதி செய்தது.
லிவர்பூல் சார்பாக லூயிஸ் டியஸ், அலெக்ஸிஸ் மக் அலிஸ்டர், கோடி கக்போ, மொஹமட் சாலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை டொமினிக் சொலங்கே பெற்றிருந்தார்.
தற்போது 34 போட்டிகளில் 82 புள்ளிகளை லிவர்பூல் பெற்றுள்ள நிலையில், இரண்டாமிடத்திலுள்ள ஆர்சனல் 67 புள்ளிகளையே பெற்றுள்ளது.
இதேவேளை போர்ண்மெத்தின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் சமப்படுத்தியது.
3 hours ago
27 Mar 2026
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
27 Mar 2026
27 Mar 2026