Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 மார்ச் 18 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் சுப்பர் லீக்கின் 2017/18 பருவகாலத்துக்கான சம்பியனாக சென்னையின் கால்பந்தாட்டக் கழகம் முடிசூடிக் கொண்டது.
பெங்களூரு ஶ்ரீ கண்டீர்வ அரங்கில் நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், இந்தியன் சுப்பர் லீக்கில் இம்முறை அறிமுகத்தை மேற்கொண்ட பெங்களூரு கால்பந்தாட்டக் கழகத்தை வென்றே இரண்டாவது தடவையாக சென்னையின் கால்பந்தாட்டக் கழகம் இந்தியன் சுப்பர் லீக்கில் சம்பியனாகிக் கொண்டது.
இப்போட்டியில், லீக் சுற்றுப் போட்டிகளில் முன்னிலை பெற்ற பெங்களூரு கால்பந்தாட்டக் கழம், மிகு உடன்ட சிங்குக்கு வழங்கிய பந்தை அவர் சுனில் சேத்திரியிடம் வழங்க, பாய்ந்து தலையால் முட்டி கோலைப் பெற்ற சுனில் சேத்ரி பெங்களூரு கால்பந்தாட்டக் கழகத்துக்கு முன்னிலை வழங்கினார்.
எவ்வாறெனினும் போட்டியின் 17, 45ஆவது நிமிடங்களில் மூலையுதைகளை தலையால் முட்டி மைல்ஸன் கோலாக்க முதற்பாதி முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் கால்பந்தாட்டக் கழகம் முன்னிலையிலிருந்தது.
பின்னர் தொடர்ந்த இரண்டாவது பாதியில், போட்டியின் 67ஆவது நிமிடத்தில் நீண்ட தூரத்துலிருந்து ரபேல் அகஸ்டோ பெற்ற கோலின் மூலமாக தமது முன்னிலையை சென்னையின் கால்பந்தாட்டக் கழகம் தமது முன்னிலையை அதிகரித்துக் கொண்டது.
போட்டியின் இறுதி நிமிடங்களில் பெங்களூரு கால்பந்தாட்டக் கழகத்தின் மிகு கோலொன்றைப் பெற்றபோதும் அது ஆறுதல் கோலாகவே அமைந்தது. போட்டி முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்ற சென்னையின் கால்பந்தாட்டக் கழகம் சம்பியனானது.
அந்தவகையில், இரண்டாவது தடவையாக இந்தியன் சுப்பர் லீக்கில் சம்பியனானகிக் கொண்ட சென்னையின் கால்பந்தாட்டக் கழகம், அதிக தடவைகளாக இரண்டு தடவைகள் இந்தியன் சுப்பர் லீக்கில் சம்பியனான அத்லெட்டிகோ டி கொல்கத்தாவின் சாதனையை சமன் செய்தது.
இறுதிப் போட்டியின் நாயகனாக மைல்ஸன் தெரிவானதோடு, தொடரின் நாயகனாக சுனில் சேத்ரி தெரிவானார். தொடரில் அதிகூடிய கோல்களைப் பெற்றவருக்கான தங்கப் பாதணி விருதை பெரான் கொரோமின்ஹாஸ் பெற்றதோடு, தொடரின் சிறந்த கோல் கால் காப்பளருக்கான தங்கக் கையுறை விருதை சுப்ரட்டா போல் வென்றார்.
எவ்வாறெனினும் தொடர்ந்து நான்காவது தடவையாக லீக் சுற்றுப் போட்டிகளில் முன்னிலை பெற்ற அணி இந்திய சுப்பர் லீக்கில் சம்பியனாகத நிலையில், முன்னிலை பெற்ற அணிக்கு எந்த சாதகமுமில்லாத இந்தியன் சுப்பர் லீக்கின் இறுதி நிலைப் போட்டிகள் கேள்விக்குள்ளாகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025