Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 17 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் வெளியேற்றப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலிடம் காலிறுதிப் போட்டியில் தோற்றே தொடரிலிருந்து ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் வெளியேற்றப்பட்டுள்ளது.
ஆர்சனலின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் தோற்ற மட்ரிட், தமது மைதானத்தில் வியாழக்கிழமை (17) அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியிலும் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்று 1-5 என்ற மொத்த கோல் கணக்கின் அடிப்படையிலேயே தொடரிலிருந்து வெளியேறியது.
ஆர்சனல் சார்பாக புகாயோ ஸாகா, கப்ரியல் மார்டினெல்லி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை வினிஷியஸ் ஜூனியர் பெற்றிருந்தார்.
இதேவேளை இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனிடம் தோற்று ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சும் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
தமது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போடியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்ற மியூனிச், இன்டரின் மைதானத்தில் நடைபெற்ற போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் சமப்படுத்திய நிலையில் 3-4 என்ற மொத்த கோல் கணக்கிலேயே மியூனிச் தொடரிலிருந்து வெளியேறியது.
மியூனிச் சார்பாக ஹரி கேன், எரிக் டயர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இன்டர் சார்பாக, லொட்டரோ மார்டினெஸ், பெஞ்சமின் பவார்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025