Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜனவரி 07 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை சாரணிய வரலாற்றில் செழிப்பான சாரணிய பாரம்பரியத்தைக் கொண்டிருக்கும் கொழும்பு சாரணரின் மிகச் சிறந்த முதன்மை நிகழ்வு கொழும்பு கெம்போறி ஆகும். அதன் 56 ஆவது கொழும்பு கெம்பொறி 2021 நிகழ்வானது ஜனவரி மாதம் 02 ஆம் திகதி ஆரம்பமானது. 09 ஆம் திகதி வரை நடைபெறும்.
42 ஆவது கொழும்பு றோயல் கல்லூரி சாரணர் படையின் ஜனாதிபதி சாரணரும், Dialog Axiata PLC நிறுவனத்தின் வலையமைப்பு செயற்பாடுகள் மற்றும் சேவை உத்தரவாதத்துக்கான உப தலைவருமான இந்திக வல்பிடகே இதன் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வினைத் தொடங்கி வைத்தார்.
வெளிப்புற சாரணர் பாசறையை மீண்டும் தொடங்குவது குறித்து கொழும்பு மாவட்ட ஆணையாளர் அமில் அபேசுந்தர கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டில் நிலவிய Covid-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாம் நடத்திய 55 ஆவது கொழும்பு மெய்நிகர் கெம்பொறி நிகழ்வு மிகப் பெரும் வெற்றிகரமான நிகழ்வாக அமைந்தது.
தற்போது நாட்டில் அன்றாட நடவடிக்கைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பும் இந்தக் காலப் பகுதியில் எமது 56 ஆவது கொழும்பு கெம்போறி நிகழ்வை நேரடியாகவும், மெய்நிகரும் கலந்த முறையில் நடத்தவிருக்கிறோம்.
இதில் சாரணர்கள் வெளிப்புற பாசறைகளை தமது வீடுகளிலோ, அயலிலோ தனியாக அல்லது சிறிய குழுக்களாக அமைப்பதோடு அவர்களால் மெய்நிகர் வழியாக சில செயற்பாடுகளில் இணைந்து கொள்ளவும் முடியும். மேலும் கெம்பொறியின் இரண்டு நிகழ்வுகளை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். அவையாவன, கெம்பொறி இளைஞர் தினம் மற்றும் தோழமையுணர்ச்சி – வெளிவாரி இளைஞர் அமைப்புகளுக்கான கெம்பொறி நகர நடைப்பயணம், அதாவது கொழும்பு நகரில் நடைப்பயணங்களை மேற்கொள்ளல்” என்று குறிப்பிட்டார்.
56 ஆவது கொழும்பு கெம்போறியின் ஒழுங்கமைப்பு ஆணையாளரும் கொழும்பு மாவட்ட உதவி சாரணர் ஆணையாளருமான (பொதுத் தொடர்புகள் / ஊடகம்) . மிரால் ஆரியபால கருத்துத் தெரிவிக்கும்போது
“ ‘உள்ளடங்கலான சமூகத்தை நோக்கி’ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டு நடத்தப்படும் கெம்பொறியானது, கொழும்பு சாரணர் வரலாற்றில் முதன்முறையாக உலகம் முழுவதிலுமிருக்கும் சாரணர்களின் பதிவுகளுக்கு அனுமதியளிக்கிறது. இது சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளதோடு 2022 ஜனவரி மாதம் 05 ஆம் திகதி இந்த கெம்பொறி தொடங்கப்பட்ட நாளில் எம்முடன் கைகோர்த்த அனைத்து சர்வதேச குழுக்களிற்கும் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
கொழும்பு மாவட்டத்தின் சிங்கிதி, குருளை, கனிஷ்ட சாரணர், சிரேஷ்ட சாரணர் மற்றும் திரிசாரணர்களும் ஏனைய மாவட்ட சாரணர்களும், சர்வதேச சாரணர்களும் பங்கேற்க முடியுமான விதத்தில் வேடிக்கையும், சாகசமும் கலந்த விரிவான முறைசாரா கல்வித் திட்ட முறையில், ஒரு முழுமையான வெற்றிகரமான கெம்போறி அனுபவத்தை வழங்க ஏற்பாட்டுக் குழு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
கொழும்பு சாரணர்கள் குறித்து
இலங்கையில் முதன்மையான சாரணர் மாவட்டமாக கருதப்படும் கொழும்பில் 11,000 இற்கும் மேற்பட்ட சிங்கிதி, குருளை, கனிஷ்ட சாரணர், சிரேஷ்ட சாரணர் மற்றும் திரிசாரணர்களை உள்ளடக்கிய 50 இற்கும் மேற்பட்ட சாரணர் குழுக்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. கொழும்பில் சாரணியம் ஆனது, சாரணர்களை சுறுசுறுப்பான குடிமக்களாக மேம்படுத்துவதிலும், அவர்களது சமூகங்களில் சாதகமான மாற்றங்களுக்கு வழிவகுப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
இலங்கை சாரணர் சங்கம் - கொழும்பு மாவட்டக் கிளை, மாவட்ட அளவில், பிரிவுகள் மட்டத்தில் பயிற்சியளிக்கப்பட்ட மூத்த தலைவர்களைக் கொண்டு நடத்தும் பல்வேறு முறைசாரா கல்வித் திட்டங்கள் மூலம் இது சாத்தியமாகும். மேலதிக விபரங்களுக்கு,www.colomboscouts.lk இணையத்தளத்துக்குள் பிரவேசிக்கவும்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago