2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சாதனை படைத்தது இந்தியா

Editorial   / 2017 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

போட்டியின் மூன்றாவது நாளான இன்று இந்திய அணி இனிங்ஸ் மற்றும் 171 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பல்லேகலயில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

அதனடிப்படையில் இந்திய அணி தனது முதல் இனிங்ஸில் 487 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அந்த அணியின் சார்பாக ஷிகர் தவான் 119 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்ட்யா 108 ஓட்டங்களையும் லோகேஷ் ராகுல் 85 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக லக்ஷான் சந்தகேன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 135 என்ற சொற்ப எண்ணிக்கையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் அதிகபட்சமாக 48 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் 352 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த இலங்கை அணி ஃபலோ ஒன் முறையில் மீண்டும் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் இலங்கை அணி 181 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .