2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சாதித்த இலங்கையர்

Shanmugan Murugavel   / 2021 டிசெம்பர் 19 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நூருல் ஹுதா உமர்

கட்டாரில் நடைபெற்ற 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட 90 கிலோ மீற்றர் மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட அம்பாறை மாவட்டம் வரிபத்தான்சேனையைச் சேர்ந்த மீராசா றெளசான் தனித்து ஓடுவதற்கான பட்டியலில் கலந்துகொண்டு ஓடி தன் இலக்கை நிறைவு செய்தமைக்காக பதக்கத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளார்.

அல்ட்ரா ரன்னர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கட்டார் விளையாட்டுகளுக்கான அனைத்து சம்மேளனம் அனுசரணையுடன் மேற்படி மரதன் ஓட்டப் பந்தயம் அண்மையில் நடைபெற்றது. இந்தப் பந்தயத்தில் தனித்து ஓடுவதற்கான பட்டியலில் 151 பேரும், குழுக்களாக ஓடுவதற்குரிய பட்டியலில் 415 பேருமாக 40 நாடுகளைச் சேர்ந்த 566 பேர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு வருடமும் கட்டார் நாட்டில் நடைபெற்று வருகின்ற இந்த பந்தயத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பங்குபற்றியமை இதுவே முதல் தடவையாகும்.

போட்டியில் கலந்து கொண்ட மேற்படி இலங்கையருக்கு கட்டாரின் இலங்கைக்கான தூதுவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X