Shanmugan Murugavel / 2025 ஜூன் 30 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான முதலாவது டெஸ்டின் இரண்டாம் நாள் முடிவில் தென்னாபிரிக்கா 216 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், புலவாயோவில் சனிக்கிழமை ஆரம்பித்த இப்போட்டியின் முதல் நாள் முடிவில் தாம் பெற்றிருந்த 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 418 ஓட்டங்கள் என்றதுடன் தமது முதலாவது இனிங்ஸை தென்னாபிரிக்கா இடைநிறுத்தியிருந்தது.
பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, கோடி யூசுஃப் (3), அணித்தலைவர் கேஷவ் மஹராஜ் (3), வியான் முல்டரிடம் (4) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றது. ஷோன் வில்லியம்ஸ் 137, அணித்தலைவர் கிரேய்க் எர்வின் 36 ஓட்டங்களைப் பெற்றனர்.
இந்நிலையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்கா, இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில் முல்டர் 25, டொனி டி ஸொர்ஸி 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கமாலுள்ளனர். வீழ்த்தப்பட்ட விக்கெட்டை தனக சிவங்கா வீழ்த்தியிருந்தார்.
25 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago