Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 20 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது போட்டியிலும் வென்ற ஆப்கானிஸ்தான் 4-1 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஜாவீட் அஹ்மாடி 76 (87), றஹ்மத் ஷா 59 (75), ரஷீட் கான் 43 (23) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சிகண்டர் ராசா, டென்டாய் சட்டாரா, பிளஸிங் முஸர்பனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 242 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, 32.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களையே பெற்று 146 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், கிறேய்க் எர்வின் 34 (75), பிரெண்டன் டெய்லர் 27 (38) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ரஷீட் கான் 3, ஷரபுதீன் அஷ்ரப், மொஹமட் நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனகான, ஷரபுதீன் அஷ்ரப் தெரிவானதோடு, தொடரின் நாயகனாக ரஷீட் கான் தெரிவாகினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025