2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிற்றியை வென்ற யுனைட்டெட்

Shanmugan Murugavel   / 2023 ஜனவரி 15 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி தோற்றது.

யுனைட்டெட் சார்பாக, ப்ரூனோ பெர்ணாண்டஸ், மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜக் கிரலிஷ் பெற்றார்.

இந்நிலையில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் தோல்வியடைந்தது.

இதேவேளை, நொட்டிங்ஹாம் பொரெஸ்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி தோற்றது.

இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற செளதாம்டனுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் தோல்வியடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X