Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 மார்ச் 05 , பி.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியில், பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான செல்சியை, பிறீமியர் லீக்கின் புள்ளிகள் பட்டியலில் தற்போது முதலிடத்திலுள்ள மன்செஸ்டர் சிற்றி வென்றுள்ளது.
இப்போட்டியில், முன்னேறிச் சென்று தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடும் யுக்தியைப் பயன்படுத்தாமல் தடுப்பாட்டத்தையே செல்சியின் முகாமையாளர் அன்டோனியோ கொன்டே பயன்படுத்தியிருந்த நிலையில், இப்போட்டியின் இரண்டாவது பாதி ஆரம்பித்த முதலாவது நிமிடத்தில், சேர்ஜியோ அகுரோ வழங்கிய பந்தை டேவிட் சில்வா உதைய, அந்த உதையை பேர்னார்டோ சில்வா கோலாக்கிப் பெற்ற கோல் காரணமாக 1-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றிருந்தது.
அந்தவகையில், இன்னும் 11 போட்டிகள் மீதமிருக்கையில், பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 78 புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்தில் காணப்படும் மன்செஸ்டர் சிற்றி, பிறீமியர் லீக் பட்டத்தைக் கைப்பற்றுவதை நெருங்கியுள்ளது. தரவரிசையில் இரண்டாமிடத்தில் தற்போது காணப்படும் லிவர்பூல், மன்செஸ்டர் சிற்றியை விட 18 புள்ளிகள் குறைவாக 60 புள்ளிகளுடன் காணப்படுகிறது.
இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனலை பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் அணி வென்றது. பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் அணி சார்பாக, லூயிஸ் டங், கிளென் மரே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை பியரி எம்ரிக் அபுமெயாங் பெற்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago