Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 23 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக்கில் தமது மைதானத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் வென்றது.
மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜூட் பெலிங்ஹாம் பெற்றார்.
இதேவேளை செக் குடியரசின் ஸ்லாவியா பிராக்குடன் தமது மைதானத்தில் நடைபெற்ற போட்டியை இன்னொரு சீரி ஏ கழகமான அத்லாண்டா 0-0 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தியது.
இந்நிலையில் தமது மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாமுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் பிரெஞ்சு லீக் 1 கழகமான மொனாக்கோ சமப்படுத்தியது.
இதுதவிர போர்த்துக்கல் கழகமான ஸ்போர்ட்டிங்கின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் பிரெஞ்சு லீக் 1 கழகமான மர்ஸெய் தோல்வியடைந்தது.
05 Feb 2026
05 Feb 2026
05 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
05 Feb 2026
05 Feb 2026
05 Feb 2026