Shanmugan Murugavel / 2016 மார்ச் 14 , மு.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்ற போட்டியில் டொட்டேன்ஹாம் ஹொட்ஸ்பூர் அணி வெற்றி பெற்றுள்ளது.
டொட்டேன்ஹாம் ஹொட்ஸ்பூர், அஸ்டன் வில்லா ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், 2-0 என்ற கோல்கணக்கில் டொட்டேன்ஹாம் ஹொட்ஸ்பூர் அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் பெறப்பட்ட இரண்டு கோல்களையும், 45ஆவது, 48ஆவது நிமிடங்களில் ஹரி கேன் பெற்றிருந்தார்.
இப்போட்டியில் பெறப்பட்ட வெற்றியுடன் தமக்கும் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் லெய்செஸ்டர் சிற்றிக்குமிடையிலான புள்ளிகள் வித்தியாசத்தை இரண்டாக குறைத்துக் கொண்டுள்ளது. லெய்செஸ்டர் சிற்றி 60 புள்ளிகளையும் டொட்டேன்ஹாம் ஹொட்ஸ்பூர் 58 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
5 minute ago
18 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
18 minute ago
22 minute ago