2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

டோணி சந்தேகம்: பார்த்திவ் பட்டேல் சேர்ப்பு

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் டோணி, நாளை இடம்பெறவுள்ள பங்களாதேஷுக்கெதிரான முதலாவது ஆசியக்கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவாரா என்ற சந்தேகம் காணப்படுகிறது. பயிற்சிகளின் போது, அவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்கான இந்தியக் குழாமில், விக்கெட் காப்பாளராக பார்த்திவ் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார்.

டாக்காவில் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, டோணியின் முதுகுத் தசையில் உபாதை ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

நாளைய போட்டியில் டோணி பங்குபற்ற மாட்டார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படாத போதிலும், உலக இருபதுக்கு-20 தொடர் விரைவில் இடம்பெறவுள்ள நிலையில், இந்தியாவின் முக்கியமான வீரரான டோணியை, உபாதைக்கு மத்தியில் விளையாடுவதற்கு இந்தியா அனுமதிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

குழாமில் சேர்க்கப்பட்டுள்ள பார்த்திவ் பட்டேல், இதற்கு முன்னர் இரண்டே இரண்டு  இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் மாத்திரம் பங்குகொண்டிருந்த போதிலும், உள்ளூர்ப் போட்டிகளில் ஓரளவு சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி வந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .