Shanmugan Murugavel / 2016 ஜூன் 23 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளைய அணியாக சிம்பாப்வே சென்ற இந்திய அணி, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரையும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரையும் கைப்பற்றியுள்ள நிலையில், இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் டோணியை, இத்தொடருக்கான இந்தியப் பயிற்றுநராகப் பதவி வகித்த சஞ்சய் பங்கர் பாராட்டியுள்ளார்.
இளைய வீரர்களிடம் தனது அனுபவத்தையும் அறிவையும் டோணி பகிர்ந்து கொண்டதாகத் தெரிவித்த பங்கர், வீரர்களுடன் ஏராளமான கலந்துரையாடல்களையும் நடத்தியதாகத் தெரிவித்தார். இளைய வீரர்களுடன் ஒன்றாக வெளியே சென்று, அவர்களுடன் இணைவதற்கான முன்னெடுப்புகளை டோணி எடுத்ததாகத் தெரிவித்த அவர், இரவு உணவுகளுக்கும் அவர் அழைத்ததாக நினைப்பதாகத் தெரிவித்தார். இளைய வீரர்களே இந்திய அணியின் எதிர்காலமெனத் தெரிவித்த பங்கர், அவர்களிடம் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டமை, அற்புதமானது எனவும் தெரிவித்தார்.
3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரை வெல்வதற்கு, 3ஆவது போட்டியை வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி, 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற போதிலும், பந்துவீச்சில் சிறப்பாகச் செயற்பட்டு, 3 ஓட்டங்களால் வென்றிருந்தது. இதன்மூலம், அத்தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago