Shanmugan Murugavel / 2016 ஜூன் 18 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வே அணிக்கும் இந்திய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில், சிம்பாப்வே அணி அதிர்ச்சி வெற்றிபெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது. அதிரடியாக ஆட முயன்றாலும், மத்திய ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து தவித்த சிம்பாப்வே அணி சார்பாக, இறுதி 5 ஓவர்களில் 59 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன.
துடுப்பாட்டத்தில் எல்ற்றன் சிக்கும்புரா 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களையும் மல்கொம் வோலர் 21 பந்துகளில் 30 ஓட்டங்களையும் ஹமில்ற்றன் மஸகட்ஸா 15 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஜஸ்பிறிட் பும்ரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
171 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 2 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. முதலாவது பந்திலேயே விக்கெட்டை இழந்த இந்திய அணி, மத்திய வரிசை வீரர்களால் ஓரளவு மீட்கப்பட்டது.
இறுதியில் அக்ஸர் பட்டேல் அதிரடியாக 9 பந்துகளில் 18 ஓட்டங்களைப் பெற்றார். இறுதி 4 பந்துகளில் 7 ஓட்டங்கள் பெறப்பட வேண்டியிருந்ததோடு, இறுதிப் பந்தில் 4 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ஆனால், டோணியால் ஓர் ஓட்டம் மாத்திரமே பெற முடிந்தது. இதற்கு முன்னர் டோணி துடுப்பெடுத்தாடிய போட்டியில் (ஐ.பி.எல் தொடரில்), இறுதி ஓவரில் 23 ஓட்டங்களைக் குவித்திருந்த போதிலும், மட்ஸிவாவின் சிறப்பான பந்துவீச்சால் சிம்பாப்வே அணிக்கு வெற்றி கிடைத்தது.
துடுப்பாட்டத்தில், மனிஷ் பாண்டே 48 (35), மந்தீப் சிங் 31 (27) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் எல்ற்றன் சிக்கும்புரா, சமு சிபாபா இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக, சிக்கும்புரா தெரிவானார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago