Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
2011ஆம் ஆண்டிலிருந்து காளக்காய்ச்சலால் அவதிப்பட்ட, டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முன்னர் நான்காம் இடம் வகித்த சுவீடன் வீரரான ரொபின் சோடர்லிங், டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
முப்பத்தொரு வயதாகும் சோடர்லிங்கே, பிரெஞ் பகிரங்கப் போட்டிகளில் களிமண் தரையில் முடிசூடா மன்னனாக இருந்த ஸ்பெயினின் ரஃபேல் நடாலை, 2009ஆம் ஆண்டு முதன்முறையாக தோற்கடித்திருந்தார். தவிர, 2009, 2010ஆம் ஆண்டு பிரெஞ் பகிரங்கப் போட்டிகளின் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்த சோடர்லிங்கால், பின்னர் ஒருபோதும் டென்னிஸ் விளையாடுவதற்காக, அவரது நோயில் இருந்து குணமடைந்து வர முடியவில்லை.
இதேவேளை விம்பிள்டன், அமெரிக்க பகிரங்கப் போட்டிகளில் காலிறுதி வரை முன்னேறியிருந்த சோடர்லிங், பஸ்டட்டில் 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுவீடிஷ் பகிரங்கப் போட்டிகளில் ஜூலை மாதம், தான் விளையாடியிருந்த இறுதிப் போட்டியில், தற்போதைய, உலகின் ஏழாம் நிலை வீரரான ஸ்பெயினின் டேவிட் பெரரைத் தோற்கடித்திருந்தார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago