2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

டேவிஸ் கிண்ண முதலாவது சுற்றை வென்றது பிரித்தானியா

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 07 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் இரண்டாம் நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மறேக்கும் உலகின் ஆறாம் நிலை வீரரான ஜப்பானின் கெய் நிஷிகோரிக்குமிடையே இடம்பெற்ற பரபரப்பான போட்டியில் அன்டி மறே வெற்றி பெற, தற்போதைய டேவிஸ் கிண்ண சம்பியன்களான பெரிய பிரித்தானியா, டேவிஸ் கிண்ண முதலாவது சுற்றில் வெற்றி பெற்றது.

ஒரு மணித்தியாலம் 54 நிமிடங்கள் பேர்மிங்ஹாமில் இடம்பெற்ற போட்டியில், 7-5, 7-6 (8-6), 3-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் அன்டி மறே வெற்றி பெற, 3-1 என்ற ரீதியில் முதலாவது சுற்றை பெரிய பிரித்தானியா வெற்றி கொண்டது.

தனது மகள் சோபியா பிறந்த பின் முதன்முறையாக போட்டிகளில் பங்குபற்றிய 28 வயதான அன்டி மறே, மூன்று நாட்களில் மூன்று போட்டிகளையும் வெற்றி கொண்டார்.

எதிர்வரும் ஜூலையில் இடம்பெறவுள்ள டேவிஸ் கிண்ண காலிறுதிப்போட்டிகளில் சேர்பியாவை பெரிய பிரித்தானியா சந்திக்கவுள்ளது.

உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச் ஏறத்தாள ஐந்து மணித்தியாலங்கள் போராடியே, 6-7 (6-8), 7-6 (7-3), 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் மிக்கையில் குகுஷ்கின்னை தோற்கடித்து, 2-2 என்ற சமநிலையை தனது நாட்டுக்கு வழங்கியிருந்த நிலையில், உலகின் 23ஆம் நிலை வீரரான விக்டர் ட்ரோய்க்கி, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சான்டர் நெடோவ்யெஸொவ்வை தோற்கடித்து டேவிஸ் கிண்ணப் போட்டிகளில் சேர்பியாவுக்கு காலிறுதி வாய்ப்பை வழங்கியிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .