Editorial / 2020 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானிய குரான் பிறீயின் இறுதிச் சுற்றில் ஏற்பட்ட டயர் வெடிப்பொன்றுக்கு மத்தியில் மெர்சிடீஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன் வென்றார்.
நேற்று நடைபெற்ற குறித்த பந்தயத்தில் லூயிஸ் ஹமில்டனின் காரின் இடது முன்புறச் சில்லின் டயர் வெடித்தபோதும், றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பனை முந்த விடாமல் தடுத்து முதலிடம் பெற மக்ஸ் வெர்ஸ்டப்பன் இரண்டாமிடத்தை பெற்றிருந்தார்.
இந்நிலையில், பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த லூயிஸ் ஹமில்டனின் சக மெர்சிடீஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்டேரி போத்தாஸின் காரின் டயரும் இறுதி இரண்டு சுற்றுகளுக்கு முன்னர் வெடித்திருந்த நிலையில், இரண்டாம் நிலையில் டயர் வெடிக்கும்போது இருந்த அவர் இறுதியில் 11ஆம் இடத்தையே பெற்றிருந்தார்.
இதேவேளை, இவ்வாறான டயர் வெடிப்பு காரணமாக பெராரி அணியின் மொனாக்டோ ஓட்டுநரான சார்ள்ஸ் லெக்கலெர்க், நான்காமிடத்திலிருந்து இறுதியில் மூன்றாமிடத்தை பிடித்திருந்தார்.
அந்தவகையில், இப்பந்தயத்தின் முடிவில் இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 88 புள்ளிகளுடன் லூயிஸ் ஹமில்டன் முதலிடத்தில் காணப்படுகின்ற நிலையில், 58 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் வல்ட்டேரி போத்தாஸும், 52 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் மக்ஸ் வெர்ஸ்டப்பனும் காணப்படுகின்றனர்.
15 minute ago
46 minute ago
52 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
46 minute ago
52 minute ago
3 hours ago