Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 மார்ச் 21 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஒக்லன்டில் நாளை ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்டுடன் ஆரம்பிக்கின்றது.
4-0 என அவுஸ்திரேலியாவிடம் ஆஷஸ் தொடரை இழந்த பின்னர் இங்கிலாந்து விளையாடவுள்ள முதலாவது டெஸ்ட் தொடராக அமைகின்ற இத்தொடர் கவனம் பெறுகின்றது.
அதுவும் ஆஷஸில் பிரகாசித்திருக்காத ஜேம்ஸ் வின்ஸ், மார்க் ஸ்டோன்மன், ஸ்டூவர்ட் ப்ரோட், மொயின் அலி, அலிஸ்டயர் குக் ஆகியோர் இத்தொடருக்கான இங்கிலாந்துக் குழாமில் இடம்பெற்றிருக்கின்ற நிலையில் இவர்களின் பெறுபேறுகள் கவனிக்கப்படுபவையாக மாறவுள்ளன. பயிற்சியிப் போட்டியில் லியாம் லிவிங்ஸ்டோன் ஓட்டங்களைப் பெற்றுள்ள நிலையில் இதுவும் மார்க் ஸ்டோன்மன், ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோருக்கு மேலதிக அழுத்தத்தை வழங்குகின்றது.
இந்நிலையில், பென் ஸ்டோக்ஸ் குழாமுக்குத் திரும்பியுள்ளபோதும் முன்னரைப் போல் நீண்ட நேரத்துக்கு பந்துவீசுவராக என்பது தெளிவில்லாமலுள்ள. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஐந்து ஓவர்களையே தொடர்ச்சியாக வீசியிருந்தார். ஆக, அணியில் மேலுமொரு பந்துவீச்சாளர் இடம்பெறும் பட்சத்தில் ஜேம்ஸ் வின்ஸின் இடம் பறிபோகும் அபாயம் காணப்படுகின்றது.
மறுபக்கம், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தமது நம்பிக்கை நாயகனாக விளங்கிய றொஸ் டெய்லர் தனது தொடை உபாதையிலிருந்து குணமடைவது நியூசிலாந்துக்கு மகிழ்ச்சியையளிப்பதாய் இருக்கும். எவ்வாறெனினும் முதலாவது டெஸ்டுக்கான குழாமில் மார்டின் கப்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இடுப்பு உபாதையிலிருந்து மீண்ட நியூசிலாந்தின் விக்கெட் காப்பாளர் பி.ஜெ வட்லிங் நேரடியாகவே குழாமுக்குத் திரும்பியுள்ளபோதும் இவருக்குப் பதிலாக மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடரில் விளையாடிய டொம் பிளன்டெல் அத்தொடரில் சதம் பெற்றதுடன் இங்கிலாந்துக்கெதிரான பயிற்சிப் போட்டியிலும் சதம் பெற்ற நிலையில் பி.ஜெ வட்லிங் அழுத்தத்தை எதிர்கொள்கின்றார்.
இத்தொடரை 1-0, 2-0 எனக் கைப்பற்றினால், சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் ஐந்தாமிடத்திலிருக்கும் இங்கிலாந்து நான்காமிடத்துக்கு முன்னேற, நான்காமிடத்திலிருக்கும் நியூசிலாந்து ஐந்தாமிடத்துக்கு கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago