Editorial / 2020 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த பருவகாலத்திலும் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பொரூசியா டொட்டமுண்டிலேயே அக்கழகத்தின் முன்களவீரரான ஜடோன் சஞ்சோ தொடரவுள்ளார் என அக்கழகத்தின் விளையாட்டுப் பணிப்பாளர் மைக்கல் ஸொர்க் தெரிவித்துள்ளார்.
சுவிற்ஸர்லாந்தில் நடைபெறவுள்ள இவ்வார பயிற்சி முகாமுக்கான பொரூசியா டொட்டமுண்ட் குழாமில் 20 வயதான ஜடோன் சஞ்சோ பெயரிடப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் ஆனது இப்பருவகாலத்தில் ஜடோன் சஞ்சோவை ஒப்பந்தம் செய்ய எதிர்பார்க்கையில், ஜடோன் சஞ்சோவுக்கான எந்தவொரு ஒப்பந்தமொன்றையும் நேற்றைக்கு முதல் இணங்க வேண்டும் என பொரூசியா டொட்டமுண்ட் காலக்கெடு விதித்திருந்த நிலையிலேயே மேற்குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், ஜடோன் சஞ்சோவை இப்பருவகாலத்தில் ஒப்பந்தம் செய்வதில் மன்செஸ்டர் யுனைட்டெட் இன்னும் உறுதியாயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜடோன் சஞ்சோவை ஒப்பந்தம் செய்வதற்கு 120 மில்லியன் யூரோக்களை பொரூசியா டொட்டமுண்ட் வேண்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
42 minute ago
48 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
48 minute ago
3 hours ago