Shanmugan Murugavel / 2021 மே 28 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், தமது கழகத்துக்கு திரும்புவது குறித்து முன்னாள் முகாமையாளர் மெளரிசியோ பொச்செட்டினோவை தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஐந்து ஆண்டுகள் டொட்டென்ஹாமில் முகாமையாளராக இருந்த பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பரில் டொட்டென்ஹாமால் நீக்கப்பட்ட பொச்செட்டினோ, இவ்வாண்டு ஜனவரி மாதத்தில், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முகாமையாளராகப் பதவியேற்றிருந்தார்.
இந்நிலையில், பொச்செட்டினோவின் பிரதியீடான ஜொஸே மொரின்யோவை கடந்த மாதம் டொட்டென்ஹாம் பதவி நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பரிஸ் ஸா ஜெர்மைனுடனான ஒப்பந்தத்தில் இன்னும் ஓராண்டை பொச்செட்டினோ கொண்டிருக்கின்ற நிலையில், டொட்டென்ஹாமுக்கும், பரிஸ் ஸா ஜெர்மைனுக்குமிடையில் எவ்விதப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
6 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
10 Apr 2026