Shanmugan Murugavel / 2023 மே 01 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று நடைபெற்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருடனான போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.
லிவர்பூல் சார்பாக, கேர்ட்டிஸ் ஜோன்ஸ், லூயிஸ் டயஸ், மொஹமட் சாலா, டியகோ ஜோட்டா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். டொட்டென்ஹாம் சார்பாக, ஹரி கேன், சண் ஹெயுங்க்-மின், றிஷலிஷன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 76 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி காணப்படுகின்றது. 75 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஆர்சனலும், 65 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நியூகாசில் யுனைட்டெட்டும், 63 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும் காணப்படுகின்றன. இதில், ஆர்சனலும், நியூகாசில் யுனைட்டெட்டும் தலா ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளன.
5 minute ago
12 minute ago
47 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
47 minute ago
58 minute ago