Shanmugan Murugavel / 2024 ஏப்ரல் 29 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், டொட்டென்ஹாமின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.
ஆர்சனல் சார்பாக புகாயோ ஸாகா, கை ஹவேர்ட்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. டொட்டென்ஹாம் சார்பாக கிறிஸ்டியானோ ரொமாரோ, சண் ஹெயுங்க்-மின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அந்தவகையில் பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 80 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் உள்ளது. 79 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியும், 75 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் லிவர்பூலும், 67 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அஸ்டன் வில்லாவுமுள்ளன.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago