Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி வென்றது.
லெய்செஸ்டர் சார்பாக, ஜேமி வார்டி ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோலை டொபி அல்டர்வெய்ல்ட் பெற்றிருந்தார்.
இந்நிலையில், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், லீட்ஸ் யுனைட்டெட்டுக்குமிடையிலான போட்டியில் 6-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது. யுனைட்டெட் சார்பாக, புரூனோ பெர்ணான்டஸ் இரண்டு கோல்களையும், ஸ்கொட் மக்டொமினி, விக்டர் லின்டெலொஃப், டேனியல் ஜேம்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். லீட்ஸ் சார்பாக, லியம் கூப்பர், ஸ்டூவர்ட் டலஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
22 minute ago
33 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
46 minute ago