2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டோக்கியோ 2020: உலக சாதனை படைத்த சீனா

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 29 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில், பெண்களுக்கான 4x200 மீற்றர் பிறீஸ்டைல் நீச்சல் அஞ்சலோட்டப் போட்டியில் சீனா உலக சாதனையை முறியடித்துள்ளது.

போட்டித் தூரத்தை ஏழு நிமிடங்கள் 40 செக்கன்கள் 33 மில்லி செக்கன்களில் சீனா கடந்த நிலையில், அவுஸ்திரேலியா வைத்திருந்த சாதனையை ஒரு செக்கன் 17 மில்லி செக்னகளால் முறியடித்திருந்தது.

இந்நிலையில், இப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஐக்கிய அமெரிக்கா, வெண்கலப் பதக்கம் வென்ற அவுஸ்திரேலியாவும் முன்னைய உலக சாதனை நேரத்தை விட குறைவான நேரத்தில் போட்டித் தூரத்தைக் கடந்திருந்தன. ஐ. அமெரிக்கா, ஏழு நிமிடங்கள், 40 செக்கன்கள், 73 மில்லி செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்ததுடன், அவுஸ்திரேலியா ஏழு நிமிடங்கள் 29 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்திருந்தது.

இதேவேளை, ஐக்கிய அமெரிக்காவின் கோலூன்றிப் பாய்தல் வீரரான சாம் கென்ட்றிக்ஸ் கொரோனா தொற்றுக்குள்ளானதைத் தொடர்ந்து போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில், ஹென்ட்றிக்ஸுடன் நெருங்கிய தொடர்பாளர்களாகக் காணப்பட்ட அவுஸ்திரேலியாவின் முழு தடகள அணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆண்களுக்கான 73 கிலோ கிராம் பிரிவு எடை தூக்கப் போட்டியில் சீனாவின் ஷி ஸியொங் தனது உலக சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார். மொத்தமாக 364 கிலோ கிராம் எடையை ஸியொங்க் தூக்கியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .