Shanmugan Murugavel / 2016 ஜனவரி 17 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று, தொடரையும் கைப்பற்றியுள்ளது.
மெல்பேண் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 295 ஓட்டங்களைக் குவித்தது. விராத் கோலி 117 (171), ஷீகர் தவான் 68 (91), அஜின்கியா ரஹானே 50 (55) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஹேஸ்டிங்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
296 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 48.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் கிளென் மக்ஸ்வெல் 96 (83), ஷோன் மார்ஷ் 62 (73), ஸ்டீவன் ஸ்மித் 41 (45) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா 2, உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா மூவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக, கிளென் மக்ஸ்வெல் தெரிவானார்.
இத்தொடரின் முதலிரு போட்டிகளையும் ஏற்கெனவே வென்றிருந்த அவுஸ்திரேலிய அணி, இப்போட்டியையும் வென்று, 3-0 என்ற கணக்கில் இத்தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago