2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

தொடர்கிறது லெய்செஸ்டரின் காத்திருப்பு

Shanmugan Murugavel   / 2016 மே 02 , மு.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் பிறீமியர் லீக் போட்டிகளில், லெய்செஸ்டர் சிற்றி, மன்செஸ்டர் யுனைட்டெட் ஆகிய அணிகளுக்கிடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில் பிறீமியர் லீக் பட்டத்தை வெல்வதற்கான லெய்செஸ்டரின் காத்திருப்பு தொடருகிறது.

எனினும் பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்தில் உள்ள டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் அணி, செல்சி அணிக்கெதிரான போட்டியில் வெற்றி பெறத் தவறினால் லெய்செஸ்டர் சிற்றி பிறீமியர் பட்டத்தை கைப்பற்றும். அவ்வாறு இல்லாமல் டொட்டென்ஹாம் இப்போட்டியில் வெற்றி பெற்றாலும் எவெர்ற்றனுடன் எதிர்வரும் சனிக்கிழமை (07) இடம்பெறவுள்ள போட்டியில் லெய்செஸ்டர் வெற்றி பெற்றாலும் பட்டத்தை கைப்பற்ற முடியும்.

லெய்செஸ்டர் சிற்றி, மன்செஸ்டர் யுனைட்டெட் ஆகிய அணிகளுக்கிடையிலான மேற்படி போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்த நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது. யுனைட்டெட் சார்பாக அந்தோனி மார்ஷியல் கோலினைப் பெற்றதோடு, லெய்செஸ்டர் சார்பாக வெஸ் மோர்கன் கோலினைப் பெற்றிருந்தார்.

இப்போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டுள்ளதன் மூலம் பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் 60 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கும் மன்செஸ்டர் யுனைட்டெட், சம்பியன்ஸ் லீக்குக்கு தகுதி பெறுவது கடினமாகியுள்ளது.

இதேவேளை இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், 2-4 என்ற கோல்கணக்கில் சௌதாம்டனிடம் மன்செஸ்டர் சிற்றி தோல்வியடைந்ததுடன் 1-3 என்ற கோல்கணக்கில் சுவான்சீ சிற்றியிடம் லிவர்பூல் தோல்வியடைந்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .