2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

தொடரை வென்றது இந்தியா

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 22 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, சிம்பாப்வே அணிகளுக்கிடையில் ஹராரேயில் இடம்பெற்ற தீர்மானமிக்க மூன்றாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1க்கு என்ற ரீதியில் கைப்பற்றியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணித் தலைவர் கிரேமி கிறீமர், இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, ஆறு விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், இந்திய அணி சார்பாக, கேதார் யாதவ் 58 (42) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், சிம்பாப்வே அணி சார்பாக டொனால்ட் ட்றிபானோ மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு, 135 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்று மூன்று ஓட்டங்களால் தோல்வியடைந்தது. அவ்வணி சார்பாக, வுசி சிபண்டா 28 (23), பீற்றர் மூர் 26 (21), டிமிசன் மரூமா ஆட்டமிழக்காமல் 23 (13) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இந்திய அணி சார்பாக, தவால் குல்கர்ணி, பரிந்தர் ஸ்ரான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக கேதார் யாதவ்வும், தொடரின் நாயகனாக பரிந்தர் ஸ்ரானும் தெரிவாகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .