Shanmugan Murugavel / 2016 மார்ச் 04 , மு.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி, மூன்று, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள நிலையில், இத்தொடரின் முதலாவது போட்டி, இலங்கை நேரப்படி, இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியாவில் உலக இருபதுக்கு-20 தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இத்தொடரானது, இரண்டு அணிகளும் தமது விளையாடும் பதினொருவர் அணியை சரிபார்த்துக் கொள்ள வாய்ப்பை வழங்குகின்றது.
அவுஸ்திரேலிய குழாமில் பல முன்வரிசைத் துடுப்பாட்டவீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், எவரை, எந்தவரிசையில் களமிறக்குவது என்று அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் தீர்மானிப்பதற்கான வாய்ப்பை இத்தொடர் வழங்குகின்றது.
மறுகணம், தென்னாபிரிக்க அணியின் சிறந்த துடுப்பாட்டவீரரான ஏ.பி.டீவில்லியர்ஸை எந்த இடத்தில் களமிறக்குவது என்பது தொடர்பாக இறுதி முடிவெடுக்க அணியின் தலைவர் பப் டூ பிளிலிசிஸுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளது. ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக தென்னாபிரிக்காவின் இறுதி இருபதுக்கு-20 போட்டியில் களமிறங்கிய ஹஷிம் அம்லா சிறப்பாகத் துடுப்பெடுத்தாடுகையில், அணிக்கு வெளியே உள்ள குயின்டன் டீகொக்கை அணிக்குள் கொண்டுவருவதனால் அம்லாவையே பிரதியீடு செய்யவேண்டிய நெருக்கடியான நிலை காணப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் தென்னாபிரிக்க அணி- ஏ.பி டீ வில்லியர்ஸ், ஹஷிம் அம்லா, பப் டூ பிளிசிஸ் (தலைவர்), ரீலி ரொஸோ, டேவிட் மில்லர், குயின்டன் டீ கொக், ஜெ.பி.டுமினி, கிறிஸ் மொரிஸ், கஜிஸ்கோ ரபடா, டேல் ஸ்டெய்ன், இம்ரான் தாகீர்
எதிர்பார்க்கப்படும் அவுஸ்திரேலிய அணி- ஆரோன் பின்ஞ், உஸ்மான் கவாஜா, ஷேன் வொற்சன், டேவிட் வோணர், ஸ்டீவன் ஸ்மித் (தலைவர்) , கிளென் மக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், ஜேம்ஸ் போக்நர், ஜோன் ஹேஸ்டிங்ஸ், நேதன் கூல்ட்டர்-நைல், அடம் ஸாம்பா
17 minute ago
23 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
23 minute ago
1 hours ago