Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
முதன்முறையாக இடம்பெற்ற, தெற்காசியாவின் பெண்கள் கூடைப்பந்தாட்டச் சம்பியன்ஷிப்பில், இலங்கை அணி சம்பியனாகியுள்ளது. நேபாளத்தை வெற்றிகொண்டே இலங்கை அணி, சம்பியன் பட்டத்தை வெற்றிகொண்டது.
இத்தொடர், நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்றது. லீக் தொடரின் இறுதிப் போட்டியில், அதுவரை முதலிரு இடங்களில் காணப்பட்ட இலங்கை அணியும் நேபாள அணியும் மோதியபோது, இலங்கை அணி ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.
முதலாவது காற்பகுதியில் 15-11 என்ற கணக்கில் முன்னிலை வகித்த இலங்கை அணி, இரண்டாவது காற்பகுதியில் மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அக்காற்பாதியில் 20-13 என்ற கணக்கில் சிறப்பான முன்னிலையைப் பெற்றது. இதனால், 35-24 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை முன்னிலை வகித்தது.
மூன்றாவது காற்பகுதியில் இரண்டு அணிகளுமே சிறப்பாக விளையாடியிருந்த நிலையில், இலங்கை அணி அணி 17-16 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்ததோடு, நான்காவதும் இறுதியுமான காற்பகுதியில், 23-9 என்ற புள்ளிகள் முன்னிலையைப் பெற்றது. இதனால் இறுதியில், 75-49 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை அணி வெற்றிபெற்று, சம்பியன் பட்டம் வென்றது.
13 minute ago
17 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
46 minute ago