Shanmugan Murugavel / 2016 ஜூன் 16 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான போட்டியில், தென்னாபிரிக்க அணிக்கு அதிரடியான வெற்றி கிடைத்தது.
சென். கிற்ஸில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்க அணி சார்பாக முதலாவது விக்கெட்டுக்காக 182 ஓட்டங்கள் பகிரப்பட்டதோடு, 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 343 ஓட்டங்களை அவ்வணி பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஹஷிம் அம்லா தனது 23ஆவது ஒ.நா.ச.போட்டி சதத்தைப் (99 பந்துகளில் 110) பெற்றார். தவிர, பப் டு பிளெஸிஸ் ஆட்டமிழக்காமல் 73 (50), குயின்டன் டீ கொக் 71 (103), கிறிஸ் மொறிஸ் 40 (26), ஏபி டி வில்லியர்ஸ் 27 (19) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கெரான் பொலார்ட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பதிலளித்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 38 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 204 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 139 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் ஜோன்சன் சார்ள்ஸ் 49 (41) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இம்ரான் தாஹிர், 9 ஓவர்களில் 45 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தவிர, தப்ரைஸ் ஷம்ஸி, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
போட்டியின் நாயகனாக, இம்ரான் தாஹிர் தெரிவானார்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago