2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

தடகளச் சாதனைகளைப் புதிதாகத் தொடங்கவும்: ஐக்கிய இராச்சியம்

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 11 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகிலுள்ள தடகள வீர, வீராங்கனைகள் மீதான நம்பிக்கையீனம், முன்னரெப்போதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் தடகளச் சம்மேளனம், அதற்கான பல்வேறான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது.

2012ஆம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் ஊக்கமருந்துப் பாவனை அதிகமாகக் காணப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுவதோடு, அரச ஆதரவுடன் ஊக்கமருந்துப் பாவனை இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, தடகளப் போட்டிகளிலிருந்து ரஷ்யா, இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதனை எதிர்கொள்வதற்கான தங்களது முன்மொழிவுகளை, ஐக்கிய இராச்சியம் சமர்ப்பித்துள்ளது.
இதன்படி, ஊக்கமருந்து தொடர்பான அனைத்துச் சோதனைகளும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமெனவும், அவை இடம்பெற்ற இடங்கள், நேரம் ஆகியனவும் குறிப்பிடப்பட வேண்டுமெனவும், தற்;போதுள்ள விதிகளை மாற்றி, நீண்ட காலப் பகுதியொன்றில் 3 சோதனைகளைத் தவறவிட்டால், தடை செய்யப்படும் விதியைக் கொண்டுவர வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

ஊக்கமருந்துப் பயன்பாட்டின் காரணமாகத் தோல்வியடைந்த வீரரொருவருக்கு, வென்றவரின் ஊக்கமருந்துப் பாவனை தொடர்பான விவரம் வெளியாகியவுடன், நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிய அவ்வமைப்பு, சர்வதேச தடகளச் சம்மேளனங்களின் சங்கம், தற்போதுள்ள சாதனைகளை விடுத்து, புதியதாக சாதனைப் பட்டியலை ஆரம்பிக்க வேண்டுமெனவும் கோரியுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக, ஊக்கமருந்துப் பாவனையில் ஈடுபடும் ஒருவருக்கு, எட்டு வருடத் தடை விதிக்கப்படப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால், 2 ஒலிம்பிக் போட்டிகளை அவர்கள் தவறவிடும் நிலை ஏற்படவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .